14 கிலோ புகையிலை பறிமுதல்; வியாபாரி கைது

சிங்கம்புணரி பகுதியில் 14 கிலோ புகையிலை பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வியாபாரி கைது செய்யப்பட்டார்.
சிங்கம்புணரி,
சிங்கம்புணரி காசியாபிள்ளை நகரை சேர்ந்தவர் முகமது ஹரிஷ் (வயது 42). இவர் மதுரையில் மொத்தமாக பொருட்களை வாங்கி வந்து இங்கு சில்லறை வியாபாரத்தில் வணிகர்களிடம் விற்று வந்துள்ளார். இந்நிலையில் இவரிடம் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்கள் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் குகன் தலைமையிலான போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த முகமது ஹரிஷை நிறுத்தி சோதனை செய்தனர்.அப்போது அவரது இருசக்கர வாகனத்தில் 14 கிலோ குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை கைது செய்து குட்காவையும் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story