கர்நாடகத்தில் புதிதாக 5,031 பேருக்கு கொரோனா...!!!

கர்நாடகத்தில் புதிதாக 5,031 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு:
கர்நாடக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இறந்தவர்களின் எண்ணிக்கை
கர்நாடகத்தில் நேற்று ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 194 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 5,031 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் மொத்தம் பாதித்தவர்களின் எண்ணிக்கை 30 லட்சத்து 22 ஆயிரத்து 603 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றுக்கு மேலும் ஒருவர் உயிரிழந்தனர். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 38 ஆயிரத்து 358 ஆக உயர்ந்துள்ளது.
சிகிச்சை பெற்று வந்தவர்களில் 271 பேர் குணம் அடைந்தனர். இதனால் குணம் அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 29 லட்சத்து 62 ஆயிரத்து 43 ஆக அதிகரித்துள்ளது. புதிதாக கொரோனா பாதித்தவர்களில் பெங்களூரு நகரில் 4,324 பேர், பல்லாரியில் 21 பேர், பெலகாவியில் 54 பேர், பெங்களூரு புறநகரில் 25 பேர், சிக்பள்ளாப்பூரில் 20 பேர், தட்சிண கன்னடாவில் 106 பேர், தார்வாரில் 48 பேர்.
ஒருவர் உயிரிழந்தார்
கதக்கில் 11 பேர், ஹாசனில் 47 பேர், கலபுரகியில் 25 பேர், குடகில் 19 பேர், கோலாரில் 14 பேர், மண்டியாவில் 66 பேர், மைசூருவில் 65 பேர், சிவமொக்காவில் 16 பேர், துமகூருவில் 20 பேர், உடுப்பியில் 92 பேர், உத்தரகன்னடாவில் 13 பேர், விஜயாப்புராவில் 11 பேர் உள்ளனர். ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றவர்களில் பெங்களூரு நகரில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கர்நாடகத்தில் நேற்று முன்தினம் 4,246 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்ட நிலையில் அது நேற்று அதிகரித்து 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story