தர்மபுரிமாவட்டத்தில் ஒரே நாளில் 23 பேருக்கு கொரோனா தொற்று

தர்மபுரிமாவட்டத்தில் ஒரே நாளில் 23 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தில் இருந்து வந்தது. கடந்த 5-ந்் தேதி 6 பேருக்கு மட்டுமே தொற்று உறுதியான நிலையில். நேற்று முன்தினம் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 23 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது. சிகிச்சையில் இருந்த 11 பேர் நேற்று வீடு திரும்பினர். மாவட்டம் முழுவதும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
Related Tags :
Next Story