ரூ.5 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல்

தஞ்சையில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் வேனில் கொண்டு வரப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்பு புகையிலை பொருட்கள் சிக்கியது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக 5 பேரை கைது செய்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சையில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் வேனில் கொண்டு வரப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்பு புகையிலை பொருட்கள் சிக்கியது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக 5 பேரை கைது செய்தனர்.
போலீசார் வாகன சோதனை
தஞ்சைக்கு வேனில் புகையிலை பொருட்கள் கடத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் ஆங்காங்கே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். இந்த நிலையில் தஞ்சை கரந்தை கோடியம்மன் கோவில் அருகே மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு இருந்தனர்.
அப்போது கும்பகோணத்தில் இருந்து தஞ்சை நோக்கி வந்த ஒரு வேனை மறித்து சோதனை செய்தனர். இதில் வேனில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 250 மூட்டைகள் இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.5 லட்சம் என்று கூறப்படுகிறது.
புகையிலை பொருட்கள் பறிமுதல்
இதையடுத்து போலீசார் புகையிலை பொருட்களையும், வேனையும் பறிமுதல் செய்தனர். மேலும் வேனில் வந்த தஞ்சை ரெட்டிப்பாளையத்தை சேர்ந்த அப்துல் லத்தீப், கும்பகோணத்தை சேர்ந்த ஆனந்தகுமார், ஜவகர் பாட்சா, லோகநாதன், கார்த்திக் ஆகிய 5 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.
பின்னர் கைது செய்யப்பட்ட 5 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்
Related Tags :
Next Story