பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி போராடியவர்கள் மீதான வழக்கு ரத்து

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி போராடியவர்கள் மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டு உள்ளது.
மதுரை,
நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியைச் சேர்ந்த முகம்மது உமர் அப்துல்லா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6-ந்தேதி ஏர்வாடி பஸ் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினோம். இதில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். இந்தநிலையில் நாங்கள் அங்கு சட்டவிரோதமாக கூடியதாகவும், பொது இடைவெளியை கடைபிடிக்காமல் கொரோனா தொற்று பரவும் வகையில் எங்களின் செயல்பாடு இருந்ததாகவும் கூறி, ஏர்வாடி போலீசார் எங்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் நாங்கள் அதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. எனவே இந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.
முடிவில், இந்த போராட்டத்தின்போது எந்தவித சட்டம்-ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படவில்லை. எனவே மனுதாரர் உள்ளிட்டவர்கள் மீதான வழக்கை ரத்து செய்கிறேன் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story