வன உயிரின பாதுகாப்பு பயிற்சி

நாடுகாணி தாவரவியல் பூங்காவில் வன உயிரின பாதுகாப்பு பயிற்சி மாணவ-மாணவிகளுக்கு அளிக்கப்பட்டது.
கூடலூர்
நாடுகாணி தாவரவியல் பூங்காவில் வன உயிரின பாதுகாப்பு பயிற்சி மாணவ-மாணவிகளுக்கு அளிக்கப்பட்டது.
மாணவ-மாணவிகளுக்கு பயிற்சி
கூடலூர் அருகே நாடுகாணியில் உள்ள தாவரவியல் பூங்காவின் தூதுவர்களாக நியமிக்கப்பட்ட மாணவ-மாணவிகளுக்கு இயற்கை மற்றும் வன உயிரின பாதுகாப்பு குறித்த பயிற்சி முகாம் நேற்று நடைபெற்றது. இதற்கு வனச்சரகர் பிரசாத் தலைமை தாங்கினார். வைல்டு கர்நாடகா மற்றும் சோலை காடுகள் என்ற விழிப்புணர்வு திரைப்படம் காண்பிக்கப்பட்டது. பின்னர் கோடைகாலம் நெருங்குவதால் பறவைகளுக்கு தண்ணீர் மற்றும் தானியங்கள் வைக்கவும், இது யானைகளுக்கு மதம் பிடிக்கும் காலம் என்பதால் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தொடர்ந்து இயற்கை மற்றும் சுற்றுச்சூழலுக்கு பேணும் வன உயிரினங்களை பாதுகாக்க முன்வ ர வேண்டும். பாம்புகளை கண்டால் அடிக்கக்கூடாது. வீட்டுக்குள் பாம்பு வந்தால் உடனே வனத்துறைக்கு தகவல் கொடுக்க வேண்டும். இதுபோன்ற சிறு வன உயிரினங்களை பாதுகாப்பாக பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வனத்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
காட்டுத்தீ
தொடர்ந்து பாம்பு பிடிப்பது குறித்து மாணவ-மாணவிகளுக்கு வனத்துறையினர் பயிற்சி அளித்தனர். மேலும் வனத்தில் புதிதாக வைத்த மரங்களின் பெயர்கள் விளக்கப்பட்டது.
பின்னர் வனச்சரகர் பிரசாத் கூறும்போது, கோடைகாலத்தில் வனத்தில் தீ எதுவும் பற்ற வைக்கக்கூடாது. காட்டுத்தீயால் அரிய வகை செடிகள் அழிந்து வருகிறது. மேலும் வனப்பகுதியில் தீ ஏற்பட்டால் உடனே வனத்துறைக்கு தகவல் கொடுக்க வேண்டும் என்றார். தொடர்ந்து ஊர்வன உயிர்களை பாதுகாக்கும் வகையில் குச்சிகள் மற்றும் இலைகளை கொண்டு ‘ஊர்வன வீடுகள்’ மரத்தின் அடியில் ஏற்படுத்தப்பட்டது. இதுபோன்று வீட்டிலும், மரத்தின் அடியிலும் ஏற்படுத்த வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாணவ-மாணவிகள், வனத்துறையினர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story