ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 149 பேருக்கு கொரோனா; முதியவர் பலி

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 149 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. தொற்றுக்கு முதியவா் பலியானாா்.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் 4 ஆயிரத்து 781 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 131 பேருக்கு தொற்று உறுதியானது. இந்தநிலையில் நேற்று புதிதாக 149 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 8 ஆயிரத்து 365 ஆக உயர்ந்தது. இதுவரை 1 லட்சத்து 7 ஆயிரத்து 75 பேர் குணமடைந்து உள்ளனர். இதில் நேற்று மட்டும் 63 பேர் கொரோனாவில் இருந்து மீண்டார்கள். தற்போது 578 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 63 வயது முதியவர் தொற்றால் பாதிக்கப்பட்டு கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். இதனால் ஈரோடு மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 712 ஆக உயர்ந்துள்ளது.
Related Tags :
Next Story