கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா


கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா
x
தினத்தந்தி 10 Jan 2022 8:37 PM IST (Updated: 10 Jan 2022 8:37 PM IST)
t-max-icont-min-icon

கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.

திண்டுக்கல்:
கொரோனா ஊரடங்கு காரணமாக கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் திண்டுக்கல் மேற்கு மரியநாதபுரத்தை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். பின்னர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, கடந்த சில நாட்களுக்கு முன்பு செட்டிக்குளம் அருகில் ராகேஷ்குமார் என்பவர், நாட்டு துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்பு இருப்பதாக கூறி மேற்கு மரியநாதபுரத்தை சேர்ந்த சகாய ஜான்பால் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆனால் அவருக்கு அந்த வழக்கில் தொடர்பு இருக்க வாய்ப்பு இல்லை. எனவே போலீசார் நியாயமான முறையில் விசாரணை நடத்த வேண்டும் என்று தெரிவித்தனர். இதையடுத்து பேசிய போலீசார், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கோரிக்கை குறித்து மனு கொடுங்கள். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story