புகார் பெட்டி


புகார் பெட்டி
x
தினத்தந்தி 11 Jan 2022 2:31 AM IST (Updated: 11 Jan 2022 2:31 AM IST)
t-max-icont-min-icon

புகார் பெட்டி

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதி சோழபுரம் கிழக்கு கிராமத்தில் காளியம்மன்கோவிலுக்கு அருகே உள்ள சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக சாலையில் பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் நடந்து செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், குண்டும், குழியுமான சாலையினால் வாகன ஓட்டிகளும் அடிக்கடி விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நலன் கருதி மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா
-சோழபுரம் கிராமமக்கள், ஒரத்தநாடு.

தஞ்சை மாவட்டம் பாபநாசத்தை அடுத்த அண்டகுடி மற்றும் உமையாள்புரம் பகுதியில் நாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகிறது. இவை வீடுகளில் வளர்க்கப்படும் கோழி, ஆடுகளை கடித்து தின்றுவிடுகின்றன. மேலும், நாய்கள் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகளை விரட்டி செல்கிறது. இதனால் அவர்கள் சாலையில் அச்சத்துடன் நடந்து செல்கின்றனர். அதுமட்டுமின்றி இருசக்கர மற்றும் கார்களை நாய்கள் துரத்தி செல்வதால் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நலன் கருதி மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா
-அண்டகுடி பகுதி மக்கள், பாபநாசம்.

Next Story