எலக்ட்ரீசியனை கல்லால் தாக்கி கொன்ற தம்பி


எலக்ட்ரீசியனை கல்லால் தாக்கி கொன்ற தம்பி
x
தினத்தந்தி 11 Jan 2022 10:56 PM IST (Updated: 11 Jan 2022 10:56 PM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூரில் போதையில் தகராறு செய்த எலக்ட்ரீசியனை கல்லால் தாக்கி தம்பி கொன்றார்.

திருப்பத்தூர்,

திருப்பத்தூரில் போதையில் தகராறு செய்த எலக்ட்ரீசியனை கல்லால் தாக்கி தம்பி கொன்றார்.

எலக்ட்ரீசியன்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சாம்பான் ஊருணி கீழக்கரையை சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மனைவி இந்திரா. இவர்களது மகன்கள் ரவிக்குமார் (வயது 42). எலக்ட்ரீசியன். ராம்குமார் (41) டிரைவர். இருவருக்கும் திருமணம் ஆகவில்லை. 
இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் ரவிக்குமார் மது குடித்து விட்டு வந்து பெற்றோரிடம் தகராறு செய்தார். உடனே ராம்குமார், தனது பெற்றோரை சித்தி வீட்டுக்கு அனுப்பி வைத்து உள்ளார்.

கல்லால் தாக்கி கொலை

பின்னர் அன்று இரவு ரவிக்குமார் மது குடித்து விட்டு தனது தம்பி ராம்குமாருடன் தகராறு செய்தார். இதில் ஆத்திரமடைந்த ராம்குமார் வீட்டிலிருந்த கல்லால் ரவிக்குமாரை தாக்கினார். இதில் படுகாயமடைந்து ரவிக்குமார் மயங்கி விழுந்துள்ளார். 
பின்னர் ராம்குமார் தனது அறைக்குச் சென்று தூங்கி விட்டார். இந்நிலையில்,நேற்று அதிகாலை வீட்டுக்கு வந்த தந்தை முருகேசன் ரவிக்குமார் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுபற்றி தகவல் அறிந்த திருப்பத்தூர் நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரமகாலிங்கம் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றார்.

கைது

 ரவிக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். தொடர்ந்து ராம்குமாரை கைது செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story