ரெயிலில் கடத்திய 15 கிலோ கஞ்சா பறிமுதல்

ரெயிலில் கடத்திய 15 கிலோ கஞ்சா பறிமுதல்
காட்பாடி
காட்பாடியில் ரெயிலில் கடத்திய 15 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு பஸ், ரெயில் மோட்டார் சைக்கிள்களில் கஞ்சா கடத்தி வரப்படுகிறது. இதனை தடுக்க போலீசார் அடிக்கடி பஸ் மற்றும் ரெயில்களில் திடீர் சோதனை நடத்துகின்றனர்.
நேற்று நள்ளிரவு காட்பாடி ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் சத்தியமூர்த்தி, ஸ்டாலின் உள்ளிட்ட போலீசார் ரெயில்களில் சோதனை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது மேற்கு வங்கத்திலிருந்து இருந்து யஷ்வந்த்பூர் செல்லும் பாட்டியா எக்ஸ்பிரஸ் ரெயில் நள்ளிரவு 1 மணிக்கு காட்பாடி ரெயில் நிலையத்திற்கு வந்தது.
அந்த ரெயில் பெட்டிகளில் ரெயில்வே போலீசார் ஏறி சோதனை நடத்தினர். அப்போது கழிவறை அருகே 3 பைகளில் 15 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த கஞ்சாவை ரெயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர். கஞ்சா கடத்தி வந்தவர்கள் யார் என்பது தெரியவில்லை.
பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை போதைப் பொருள் நுண்ணறிவு குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாரிடம் ரெயில்வே போலீசார் ஒப்படைத்தனர். அவர்கள் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த மாதம் ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு ஆந்திர அரசு பஸ்சில் கடத்தி வந்த 34 கிலோ கஞ்சா பொட்டலங்களை போதை பொருள் நுண்ணறிவு குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை சோதனைச்சாவடி அருகே பறிமுதல் செய்தனர். இதில் கணவன்-மனைவி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story