சிறப்பாக பணியாற்றிய வருவாய் அலுவலர்களுக்கு பரிசு

சிறப்பாக பணியாற்றிய வருவாய் அலுவலர்களுக்கு பரிசினை, கலெக்டர் மேகநாதரெட்டி வழங்கினார்.
விருதுநகர்,
சிறப்பாக பணியாற்றிய வருவாய் அலுவலர்களுக்கு பரிசினை, கலெக்டர் மேகநாதரெட்டி வழங்கினார்.
ஆய்வு கூட்டம்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் மேகநாதரெட்டி தலைமையில் வருவாய் துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், சிறப்பாக பணியாற்றிய சிறந்த வருவாய் வட்டாட்சியர்களில் சிவகாசி வருவாய் வட்டாட்சியர் ராஜகுமாருக்கு முதல் பரிசும், சாத்தூர் வருவாய் வட்டாட்சியர் சீதாலெட்சுமிக்கு 2-வது பரிசும், வத்திராயிருப்பு வருவாய் வட்டாட்சியர் சின்னத்துரைக்கு 3-வது பரிசும் பெற்றதற்கு சான்றிதழ் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டன.
அதேபோல சிறப்பாக பணியாற்றிய தனி வட்டாட்சியர் களில் சாத்தூர் தனி வட்டாட்சியர் வெங்கடேசிற்கு முதல் பரிசும், வெம்பக்கோட்டை தனி வட்டாட்சியர் ரங்கசாமிக்கு 2-வது பரிசும், சிவகாசி தனி வட்டாட்சியர் ஆனந்தராஜ்க்கு 3-வது பரிசும் வழங்கப்பட்டது.
பட்டா மாறுதல் மனு
பட்டா மாறுதல் மனுக்களை அதிக அளவில் ஏற்பளிப்பு செய்த திருச்சுழி மண்டல துணை வட்டாட்சியர் சரவணக்குமாருக்கு முதல் பரிசும், சாத்தூர் மண்டல துணை வட்டாட்சியர் முத்துலட்சுமிக்கு 2-வது பரிசும், வெம்பக்கோட்டை மண்டல துணை வட்டாட்சியர் பாலமுருகனுக்கு 3-வது பரிசும் வழங்கப்பட்டது.
அதிக அளவில் வருவாய் வசூல் மேற்கொண்ட வருவாய் வட்டாட்சியர்களில் வெம்பக்கோட்டை முன்னாள் வருவாய் வட்டாட்சியர் தனராஜ்க்கு முதல்பரிசும், ராஜபாளையம் வருவாய் வட்டாட்சியர் ராமச்சந்திரனுக்கு 2-வது பரிசும், சிவகாசி வருவாய் வட்டாட்சியர் ராஜகுமாருக்கு 3-வது பரிசும், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
கள ஆய்வு
அதிக எண்ணிக்கையில் கள ஆய்வு செய்து உட்பிரிவு மனுக்களை முடிவுசெய்த சிறந்த வட்ட சார் ஆய்வாளர்களில் சிவகாசி சார் ஆய்வாளர் ஆனந்தராஜ்க்கு முதல் பரிசும், சாத்தூர் குறுவட்ட நில அளவர் கற்பகத்திற்கு 2-வது பரிசும், ஸ்ரீவில்லிபுத்தூர் குறுவட்ட நில அளவர் பாண்டிசெல்விக்கு 3-வது பரிசினையும் கலெக்டர் மேகநாதரெட்டி வழங்கினார்.
இதைேபால பல்வேறு துறைகளில் சாதனைபடைத்த அதிகாரிகளுக்கும் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மங்களராமசுப்ரமணியன், சப்-கலெக்டர் (சிவகாசி) பிரித்திவிராஜ், வட்டாட்சியர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story