கொரோனா கட்டுப்பாடுகளை மீறிய 77 பேர் மீது வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா கட்டுப்பாடுகளை மீறியதாக 77 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க பொது இடங்களில் அதிக அளவில் மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதேபோன்று முககவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருபவர்களுக்கு அபராதமும் விதிக்கப்படுகிறது. இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் தமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்ட 77 பேர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது இடங்களில் முககவசம் அணியாமல் சென்றதாக, தூத்துக்குடி நகர உட்கோட்டத்தில் 39 பேர் மீதும், தூத்துக்குடி ஊரக உட்கோட்டத்தில் 41 பேர் மீதும், திருச்செந்தூர் உட்கோட்டத்தில் 48 பேர் மீதும், ஸ்ரீவைகுண்டம் உட்கோட்டத்தில் 10 பேர் மீதும், மணியாச்சி உட்கோட்டத்தில் 19 பேர் மீதும், கோவில்பட்டி உட்கோட்டத்தில் 34 பேர் மீதும், விளாத்திகுளம் உட்கோட்டத்தில் 2 பேர் மீதும், சாத்தான்குளம் உட்கோட்டத்தில் 12 பேர் மீதும் ஆக மொத்தம் 205 பேருக்கு ரூ.41 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story