பெண்ணை அவதூறாக பேசிய கட்டிட தொழிலாளி கைது


பெண்ணை அவதூறாக பேசிய கட்டிட தொழிலாளி கைது
x
தினத்தந்தி 5 Feb 2022 10:35 PM IST (Updated: 5 Feb 2022 10:35 PM IST)
t-max-icont-min-icon

பெண்ணை அவதூறாக பேசிய கட்டிட தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

சாத்தான்குளம்:
சாத்தான்குளம் அருகே உள்ள வைரவம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாயாண்டி என்பவருடைய மனைவி ஜெயகலா (வயது 35). இவர் நேற்று முன்தினம் அங்குள்ள வைரவம் தருவை குளத்தில் துணி துவைத்து கொண்டு இருந்தார்.
அப்போது தாமரைமொழி வள்ளுவர் தெருவைச் சேர்ந்த சமுத்திரகனி மகன் கட்டிட தொழிலாளி பாஸ்கர் குளிக்க வந்தார். 
அப்போது ஜெயகலாவுக்கும், பாஸ்கருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றிய நிலையில் ஆத்திரம் அடைந்த பாஸ்கர், ஜெயகலாவை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. 
இதுகுறித்து ஜெயகலா தட்டார்மடம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பென்சன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பாஸ்கரை கைது செய்தார்.

Next Story