கிருஷ்ணகிரி வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா


கிருஷ்ணகிரி  வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
x
தினத்தந்தி 6 Feb 2022 10:07 PM IST (Updated: 6 Feb 2022 10:07 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி பழையபேட்டை நேதாஜி சாலையில் உள்ள ஸ்ரீவாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. இதையொட்டி கடந்த 3-ந் தேதி விக்னேஸ்வர பூஜை, மகா சங்கல்பம், பூஜைகள் நடந்தது. 4-ந் தேதி கணபதி, நவகிரக, மகாலட்சுமி ஹோமங்கள் நடந்தது. மாலை திருவிளக்கு பூஜை, முதல் கால யாக பூஜை நடந்தது. நேற்று முன்தினம் தன்வந்திரி மகாலட்சுமி பூஜை, ஹோமங்கள், 2-ம் கால யாக பூஜைகள் நடந்தது. விழாவின் முக்கிய நாளான நேற்று கோபூஜை, கஜபூஜை, 4-ம் கால யாக பூஜை மற்றும் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Next Story