பெண்ணின் மீது தாக்குதல்

வேதாரண்யம் அருகே பெண்ணை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் ராமகிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் மஞ்சுளா (வயது 40). இவருடைய மகள் குணசெல்வி(24). இவருக்கு திருமணமாகி விட்டது. இந்த நிலையில் சம்பவத்தன்று மஞ்சுளா வேலைக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் தனியாக இருந்த குணசெல்வியிடம் அதே தெருவை சேர்ந்த உறவினர் கார்த்திகேயன் (30) என்பவர் தகராறு செய்து அவரை தாக்கி உள்ளார். இதில் காயம் அடைந்த குணசெல்வி சிகிச்சைக்காக வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து மஞ்சுளா கொடுத்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேவபாலன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திகேயனை கைது செய்தனர்.
Related Tags :
Next Story