வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் அருண் தம்புராஜ் ஆய்வு

நாகையில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் அருண் தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வெளிப்பாளையம்:
நாகையில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் அருண் தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வளர்ச்சி திட்ட பணிகள்
நாகை அக்கரைப்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.37 லட்சம் மதிப்பீட்டில் முதல் தளம் அமைக்கும் பணியினையும், ரூ.96 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் சமுதாய கட்டுமான பணியினையும் கலெக்டர் அருண் தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் மகாத்மாகாந்தி வேலை உறுதி திட்டத்தின் கீழ் சமுதாய கூடத்திற்கு செல்லும் சாலையில் ரூ.9 லட்சத்து 54 ஆயிரம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் அமைக்கும் பணியினையும், ரூ.5 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பீட்டில் பொதுக்கழிவறை கட்டுமான பணியினையும். வடக்கு பொய்கை நல்லூர், தெற்கு பொய்கை நல்லூர் ஊராட்சிகளில் பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டும் பணியைும் மற்றும் நாகையில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளையும் பார்வையிட்டார்.
அங்காடியில் ஆய்வு
மேலும், வடக்கு பொய்கை நல்லூர் ஊராட்சியில் உள்ள அங்காடியில் பார்வையிட்ட கலெக்டர் அங்கு அத்தியாவசிய பொருட்களின் இருப்பு மற்றும் தரம் குறித்து ஆய்வு செய்தார்.ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலமுருகன், ரேவதி, உதவி செயற்பொறியாளர்கள் மணிமாறன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story