நெல்லை:கல்லூரி பேராசிரியருக்கு அரிவாள் வெட்டு

கல்லூரி பேராசிரியருக்கு அரிவாள் வெட்டு
நெல்லை:
பாளையங்கோட்டை பெருமாள்புரம் அன்புநகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ராம்குமார் (வயது 44). இவர் நெல்லையில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஜெகன் (37) என்பவருக்கும் இடையே ஏற்கனவே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ராம்குமார் தனது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஜெகன், ராம்குமாரிடம் தகராறில் ஈடுபட்டார். இதில் ஆத்திரமடைந்த ஜெகன், ராம்குமாரை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த ராம்குமார் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story