வாக்கு எண்ணும் மையங்களை கலெக்டர் ஆய்வு


வாக்கு எண்ணும் மையங்களை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 11 Feb 2022 9:52 PM IST (Updated: 11 Feb 2022 9:52 PM IST)
t-max-icont-min-icon

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு வாக்கு எண்ணிக்கை மையம் அமைய உள்ள ராமநாதபுரம் அண்ணா பல்கலைக்கழக என்ஜினீயரிங் கல்லூரியில் முன்னேற்பாடுகளை கலெக்டர் சங்கர்லால் குமாவத் பார்வையிட்டார்.

ராமநாதபுரம், 
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு வாக்கு எண்ணிக்கை மையம் அமைய உள்ள ராமநாதபுரம் அண்ணா பல்கலைக்கழக என்ஜினீயரிங் கல்லூரியில் முன்னேற்பாடுகளை கலெக்டர் சங்கர்லால் குமாவத் பார்வையிட்டார்.
வாக்குப்பதிவு
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரம், பரமக்குடி, ராமேசுவரம், கீழக்கரை ஆகிய 4 நகராட்சிகள் மற்றும் மண்டபம், ஆர்.எஸ்.மங்கலம், தொண்டி, சாயல்குடி, கமுதி, முதுகுளத்தூர், அபிராமம் ஆகிய 7 பேரூராட்சிகளுக்கு வரும் 19-ந்தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.111 நகராட்சி கவுன்சிலர் மற்றும் 108 பேரூராட்சி கவுன்சிலர் உள்பட 219 பதவிகளுக்கு நடத்தப் படும் இந்த தேர்தலுக்காக மாவட்டம் முழுவதும் 342 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. 
மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மூலம் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 2 நகராட்சி கவுன்சிலர், 12 பேரூராட்சி கவுன்சிலர்கள் ஏற்கனவே போட்டியின்றி தேர்வு செய்யப் பட்டு உள்ளனர். இதுதவிர 109 நகராட்சி கவுன்சிலர் பதவிகளுக்கு 527 வேட்பாளர்கள், 96 பேரூராட்சி கவுன்சிலர் பதவிகளுக்கு 393 வேட்பாளர்கள் என மொத்தம் 920 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிடுகின்றனர். 
வருகிற 22-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. ராமநாதபுரம், ராமேசுவரம், கீழக்கரை நகராட்சிகள் மற்றும் மண்டபம், ஆர்.எஸ்.மங்கலம், தொண்டி பேரூராட்சிகளின் வாக்குகள் ராமநாதபுரம் அண்ணா பல்கலைக்கழக என்ஜி னீயரிங் கல்லூரியிலும், பரமக்குடி நகராட்சி மற்றும் முதுகுளத் தூர், கமுதி, அபிராமம், சாயல்குடி ஆகிய பேரூராட்சிகளின் வாக்குகள் பரமக்குடி அழகப்பா மாதிரி கலை அறிவியல் கல்லூரியிலும் நடைபெற உள்ளது.
முன்ஏற்பாடு
 19-ந்தேதி வாக்குப்பதிவு முடிவடைந்ததும் அன்று மாலை போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எந்திரங்கள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு வரப்பட்டு 22-ந்தேதி எண்ணப்பட உள்ளது. இதற்காக வாக்கு எண்ணும் மையங்களில் முன்ஏற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது.
ராமநாதபுரம் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் செய்யப் பட்டு உள்ள முன் ஏற்பாடு நடவடிக்கைகளை கலெக்டர் சங்கர்லால் குமாவத் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத ்தினார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை பணிகள் அமைதியாக நடைபெறவும், பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளதாக கலெக்டர் தெரிவித் தார். கலெக்டருடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக், தேர்தல் பார்வையாளர் அஜய்யாதவ், தேர்தல் பிரிவு உதவியாளர் முத்துசாமி, ராமநாதபுரம் நகராட்சி தேர்தல் அதிகாரி சந்திரா உள்பட அலுவலர்கள் உடன் சென்றனர்.

Next Story