மில்லில் பதுக்கிய ரேஷன் அரிசி மூடைகள் பறிமுதல்


மில்லில் பதுக்கிய ரேஷன் அரிசி மூடைகள் பறிமுதல்
x
தினத்தந்தி 12 Feb 2022 1:07 AM IST (Updated: 12 Feb 2022 1:07 AM IST)
t-max-icont-min-icon

திருமங்கலம் அருகே மில்லில் ரேஷன் அரிசி பதுக்கியவரை போலீசார் கைது செய்தனர். மேலும் மூடை மூடையாக அரிசி பறிமுதல் செய்யப்பட்டன.

திருமங்கலம்
திருமங்கலம் அருகே மில்லில் ரேஷன் அரிசி பதுக்கியவரை போலீசார் கைது செய்தனர். மேலும் மூடை மூடையாக அரிசி பறிமுதல் செய்யப்பட்டன.
 சோதனை
மதுரை மாவட்டத்தில் சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், திருமங்கலம் தாலுகா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கீழக்கோட்டை பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது.
இதனை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவின்பேரில் தனிப்படை போலீசார் அந்த பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஒரு ரைஸ் மில்லில் ரேஷன் அரிசி மூடை, மூடையாக பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து, ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்த செந்தில்குமார் (வயது48) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும், மில்லில் இருந்து 2 ஆயிரத்து 250 கிேலா எடையுள்ள 60 மூடை ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
அதேபோல், பெருங்குடி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட, அண்ணாநகர் முதல் தெருவில் உள்ள ஒரு வீட்டில் சோதனை செய்தபோது சுமார் 1000 கிலோ எடையுள்ள 23 மூடை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாகவும் போலீசார் சம்பந்தப்பட்ட நபரிடம் விசாரித்து வருகின்றனர்.
எச்சரிக்கை
இதனை தொடர்ந்து, இந்த வழக்குகளில் கைப்பற்றப்பட்ட ரேஷன் அரிசியை, குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு குழுவிடம் மேல் நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்பட்டது.மேலும், மதுரை மாவட்டத்தில் சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்தல், பதுக்குவோர் மற்றும் கடத்தலில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் எச்சரித்துள்ளார்.

Next Story