வாடகை பாக்கி செலுத்தாத 2 கடைகளுக்கு `சீல்'
வாடகை பாக்கி செலுத்தாத 2 கடைகளுக்கு பூட்டி சீல வைத்தனர்
நெல்லை:
பாபநாசம் பாபநாசநாத சுவாமி கோவிலுக்கு சொந்தமான இடத்தில் உள்ள கடைகளுக்கு சிலர் பல மாதங்களாக வாடகை பாக்கி செலுத்தாமல் இருந்தனர். அதன்படி பாபநாசநாத சுவாமி கோவில் வளாகத்தில் உள்ள ஒருவரது கடைக்கான வாடகை பாக்கி ரூ.1 லட்சத்து 70 ஆயிரமும், அகஸ்தியர் கோவில் முன்புள்ள மற்றொரு கடைக்கான வாடகை பாக்கி ரூ.2 லட்சத்து 12 ஆயிரமும் செலுத்தப்படாமல் இருந்தது. இதையடுத்து அறநிலையத்துறை உதவி ஆணையர் சங்கர் உத்தரவின் பேரில், கோவில் ஆய்வாளர் கோமதி, கோவில் செயல் அலுவலர் ஜெகநாதன் மற்றும் அதிகாரிகள் நேற்று போலீஸ் பாதுகாப்புடன் அந்த 2 கடைகளையும் பூட்டி `சீல'் வைத்தனர்.
Related Tags :
Next Story