விபத்துக்களை ஏற்படுத்தும் ஒரு வழிப்பாதைகள்

சிவகாசி நகரின் மையப்பகுதியில் விபத்துக்கள் ஏற்பட காரணமாக இருக்கும் ஒருவழிப்பாதை அறிவிப்பினை வாபஸ் பெற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
சிவகாசி,
சிவகாசி நகரின் மையப்பகுதியில் விபத்துக்கள் ஏற்பட காரணமாக இருக்கும் ஒருவழிப்பாதை அறிவிப்பினை வாபஸ் பெற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
பள்ளிகள்
சிவகாசி நகரத்தின் மையபகுதியில் ஸ்ரீவில்லிபுத்தூர் ரோட்டில் 5-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் இயங்கி வருகிறது. இந்த பள்ளிக்கு மாணவ, மாணவிகள் ஆட்டோ, மோட்டார் சைக்கள், சைக்கிள் ஆகியவைகளில் வந்து செல்கிறார்கள். நகரின் மையப்பகுதியில் பள்ளிகள் இயங்குவதால் பல குறுக்குசாலைகளை கடந்து பள்ளிக்கு வர வேண்டிய நிலை உள்ளது.
இப்படி பல்வேறு இடங்களில் இருந்து பள்ளிக்கு வரும் மாணவர்களை சிவகாசி போக்குவரத்து போலீசார் பள்ளியின் அருகில் வரும் போது ஒரு வழிப்பாதை என அறிவித்து அவர்களை அலைக்கழிக்கிறார்கள். குறிப்பாக சாட்சியாபுரத்தில் இருந்து இந்த பகுதியில் உள்ள பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் 50 மீட்டர் தூரத்தில் பள்ளி இருக்கிற நிலையில் ஒருவழிப்பாதை என்று கூறி மாணவர்களை 2 கிலோ மீட்டர் தூரம் சுற்றி பள்ளிக்கு வர வேண்டும் என்று போலீசார் அறிவித்துள்ளனர். அதே போல் கிழக்கு பகுதியில் இருந்து வரும் மாணவர்கள் 3 திசைகளில் பள்ளிகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பள்ளியில் குழந்தைகளை விட்டு, விட்டு வீடு திரும்பும் பெற்றோர்கள் மற்றும் ஆட்டோ டிரைவர்களுக்கு எதிர்திசையில் வரும் வாகனங்களை கடந்து செல்வதில் பெரும் சிரமம் ஏற்படு கிறது.
தடுப்பு கம்பி
சிவகாசி ரத வீதிகளை கடந்து தான் பெரும்பாலான வாகனங்கள் பள்ளிகளை நோக்கி செல்கிறது. அந்த பகுதியில் ஒரே நேரத்தில் 100-க்கும் அதிகமான வாகனங்கள் கடந்து செல்ல வேண்டிய நிர்பந்தம் இருக்கும் நிலையில் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்தும் வகையில் தடுப்பு கம்பி களை போலீசார் வைத்துள்ளனர்.
இந்த பகுதியை கடந்து செல்வதில் வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைகிறார்கள். இந்த தடுப்பு கம்பிகள் காலை 9 மணிக்கு பின்னர் வைக்க வேண்டியவை. ஆனால் அதை இரவு அகற்ற மறுக்கும் போலீசார் காலையில் பள்ளி நேரத்திலும் தொடர்ந்து அதே பகுதியில் வைப்பதால் மேற்கு பகுதியில் இருந்து வரும் மாணவர்களும், சிவகாசி டவுன் போலீஸ் நிலையம் அருகில் உள்ள பகுதியில் இருந்து வரும் வாகனங்களும், நகரின் கிழக்கு பகுதி மற்றும் முருகன் கோவில் அருகில் இருந்து வரும் வாகனங்களும் ஒரே இடத்தில் சந்திப்பதால் அங்கு தேவையின்றி வாகன நெரிசல் ஏற்படுகிறது.
இந்த போக்குவரத்து பிரச்சினை அடிக்கடி ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் காலை மற்றும் மாலை நேரங்களில் குறிப்பிட்ட பகுதியில் மாணவர்கள் வரும் போது அவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை நேரில் ஆய்வு உரிய தடுப்பு மற்றும் மாற்று நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Related Tags :
Next Story