மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி

மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலியானார்.
தொண்டி,
திருவாடானை தாலுகா முகில்தகம் வெள்ளாள கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஆரோக்கியம் (வயது 70). கூலித் தொழிலாளி. இவர் நம்புதாளைக்கு வேலைக்கு சென்றுவிட்டு இவருக்கு சொந்தமான சைக்கிளில் ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தாராம். அப்போது அதிவேகமாக வந்த மோட் டார் சைக்கிள் ஆரோக்கியம் மீது மோதியதில் சாலையில் தூக்கி வீசப்பட்டு உள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவரை திருவாடனை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த தொண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் ஆரோக்கியத்தின் உடலை கைப்பற்றி திருவா டானை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத் தனர். இதுகுறித்து தொண்டி போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story