பறக்கும் படையினர் சோதனையில் ரூ.1 லட்சம் பறிமுதல்
பறக்கும் படையினர் சோதனையில் ரூ.1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
வேலூர்
வேலூர் சத்துவாச்சாரியில் வட்டார போக்குவரத்து அலுவலகம் செல்லும் சாலை சந்திப்பு சர்வீஸ் சாலையில் பறக்கும் படை அதிகாரிகள் நேற்று வாகன சோதனை நடத்தினர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை வழிமறித்து சோதனை செய்தனர். அவரிடம் ரூ.1 லட்சம் இருந்தது.
அந்த பணம் குறித்து அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில், அவர் அதே பகுதியை சேர்ந்த கார்த்தி என்பதும், தனியார் டிக்கெட் ஏஜென்சி நடத்தி வந்ததும் தெரியவந்தது.
மேலும் வியாபாரத்தில் கிடைத்த பணத்தை வங்கிக்கு கொண்டு செல்வதாக கூறினார். பணத்துக்கான ஆவணங்களை அதிகாரிகள் கேட்டனர். ஆனால் அவரிடம் அதற்கான ஆவணங்கள் இல்லை. இதையடுத்து பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து வேலூர் மாநகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் அசோக்குமாரிடம் ஒப்படைத்தனர்.
Related Tags :
Next Story