குண்டர் சட்டத்தில் 6 பேர் கைது
புளியங்குடியில் குண்டர் சட்டத்தில் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
புளியங்குடி:
புளியங்குடி பகுதியில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட புளியங்குடியைச் சேர்ந்த உலகநாதன் மகன் சிவசுப்பிரமணியன் (வயது 19), முத்துசாமி மகன் மணிகண்டன் ரவி (23), சிதம்பராபுரத்தைச் சேர்ந்த மாரியப்பன் மகன் கபில் குமார் (20), சங்கரன்கோவிலை சேர்ந்த சலீம் மகன் முகமது அலி (22), சண்முகராஜ் மகன் காளிராஜ் (19), பாதுஷா மகன் ஷெரீப் (20) ஆகிய 6 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ், மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரைத்தார். இதனை ஏற்று 6 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார்.
அதன் பேரில் 6 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து உத்தரவு ஆணையை பாளையங்கோட்டை மத்திய சிறையில் புளியங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம் வழங்கினார்.
Related Tags :
Next Story