நாளை தேர்தல் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 1000 போலீசார் பாதுகாப்பு


நாளை தேர்தல் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 1000 போலீசார் பாதுகாப்பு
x
தினத்தந்தி 17 Feb 2022 11:21 PM IST (Updated: 17 Feb 2022 11:21 PM IST)
t-max-icont-min-icon

நாளை தேர்தல் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 1000 போலீசார் பாதுகாப்பு

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர் ஆகிய 3 நகராட்சிகள் மற்றும் சின்னசேலம், சங்கராபுரம், தியாகதுருகம், மணலூர்பேட்டை, வடக்கநந்தல் ஆகிய 5 பேரூராட்சிகளில் உள்ள 141 பதவிகளுக்கு தேர்தல் நாளை(சனிக்கிழமை) நடைபெறவுள்ளது. இதற்காக 200 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 54 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு அங்கு கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு கூடுதல் போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

 தேர்தல் பாதுகாப்பு பணியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் தலைமையில், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் ஜவகர்லால், விஜய் கார்த்திக்ராஜா, சுப்புராயன், 7 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 1,000 போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் சப்-இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 5 போலீசார் கூடுதலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.


Next Story