செல்போன் கோபுரத்தில் ஏறி சுயேச்சை வேட்பாளர் தற்கொலை மிரட்டல்


செல்போன் கோபுரத்தில் ஏறி சுயேச்சை வேட்பாளர் தற்கொலை மிரட்டல்
x
தினத்தந்தி 18 Feb 2022 12:29 AM IST (Updated: 18 Feb 2022 12:29 AM IST)
t-max-icont-min-icon

சாயல்குடியில் செல்போன் கோபுரத்தில் ஏறி சுயேச்சை வேட்பாளர் தற்கொலை மிரட்டல் விடுத்தார்.

சாயல்குடி,

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் பேரூராட்சி தேர்தலில் 1-வது வார்டு சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுபவர் சரவணமூர்த்தி (வயது 52). இவர் நேற்று மாலை சாயல்குடி பஸ் நிலையம் அருகே உள்ள செல்போன் கோபுரத்தில் ஏறி தனக்கு கொலை மிரட்டல் வருவதாகவும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரி கோஷம் எழுப்பி தற்கொலை மிரட்டல் விடுத்தார். தகவல் அறிந்த கீழக்கரை துணை சூப்பிரண்டு சுபாஷ், மதுவிலக்கு துணை சூப்பிரண்டு ராஜ், சாயல்குடி இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். சாயல்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் பொன்னையா தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் அவரை மீட்பதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டனர். ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பின்பு செல்போன் கோபுரத்தில் இருந்து அவர் கீழே இறங்கினார்.பின்னர் அவரை சாயல்குடி போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்கள். இந்த சம்பவம் சாயல்குடியில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story