கோவில் கொள்ளை வழக்கில் வாலிபர் கைது


கோவில் கொள்ளை வழக்கில் வாலிபர் கைது
x
தினத்தந்தி 18 Feb 2022 2:12 AM IST (Updated: 18 Feb 2022 2:12 AM IST)
t-max-icont-min-icon

உப்பிலியபுரம் அருகே கோவிலில் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

உப்பிலியபுரம்
உப்பிலியபுரம் அருகே உள்ள எரகுடி பிரதான சாலையில் அமைந்துள்ளது, வரதராஜபெருமாள் கோவில். சம்பவத்தன்று மதி்ல் சுவர் ஏறிக்குதித்து, கோவிலின் உள்ளே சென்ற மர்ம நபர் அங்கிருந்த மகாமண்டபம், அர்த்த மண்டப பூட்டுகளையும், உள்ளே இருந்த பீரோக்களையும் உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த சுவாமி நகைகளை கொள்ளையடித்து சென்றார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வாலிபர் கைது
இதுதொடர்பாக முசிறி துணை போலீஸ் சூப்பிரண்டு அருள்மணி, துறையூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆகியோர் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வந்தனர். கோவில் மற்றும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் பார்வையிட்டு விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையில், எரகுடியை சேர்ந்த பழனிச்சாமியின் மகன் மதன் (வயது 24) என்பவர் கோவில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
கோவில் நகைகள் மீட்பு
 அவரிடமிருந்து, கோவிலில் கொள்ளையடிக்கப்பட்ட வெள்ளியிலான நாமம், ஒட்டியாணம், தர்ணாபாத்திரம், கை அஸ்தம் உள்பட சுமார் 2½ கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் இரண்டு தங்கத்தாலிகள் முதலான சுமார் ரூ.2 லட்சம் மதிப்பிலான கோவில் நகைகள் மீட்கப்பட்டன. அவர் இதுபோன்று பல்வேறு இடங்களில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதும் தரிய வந்தது. கொள்ளை சம்பவம் நடந்த 15 நாட்களில் குற்றவாளியை கைது செய்த போலீசாரை, முசிறி துணை போலீஸ் சூப்பிரண்டு பாராட்டினார்.

Next Story