ரெயில் பாதையை மின்மயமாக்குவதற்கான பணி

ரெயில் பாதையை மின்மயமாக்குவதற்கான பணி
உடுமலை,
உடுமலையில், பாலக்காடு- திண்டுக்கல் இடையேயான ரெயில் பாதையை மின்மயமாக்குவதற்கான பணிகளில், மின் கம்பிகளை இணைக்கும் இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
தண்ணீர் நிரப்பும் பணி
கேரள மாநிலத்தில் உள்ளபாலக்காடு முதல் தமிழ்நாட்டில் உள்ள திண்டுக்கல் வரையிலான ரெயில்பாதை முன்பு மீட்டர்கேஜ் ரெயில்பாதையாக இருந்து வந்தது. அதன் பிறகு இந்த ரெயில்பாதை அகலரெயில்பாதையாக மாற்றப்பட்டு 2015-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தென்னக ரெயில்வே நிர்வாகம், பாலக்காடு முதல் பொள்ளாச்சி, உடுமலை, பழனி, ஒட்டன்சத்திரம் வழியாக திண்டுக்கல் வரையிலான அகல ரெயில்பாதையை மின்மயமாக்க திட்டமிட்டு, இந்த பணிகள் தற்போது உடுமலை பகுதியிலும் தீவிரமாக நடந்து வருகிறது. அதன்படி மின்மயமாக்குதலுக்குத்தேவையான மின் கம்பங்கள் சரக்கு ரெயிலில் உடுமலைக்கு கொண்டு வரப்பட்டு, சரக்கு ரெயிலுடன் இணைக்கப்பட்டு கொண்டு வரப்பட்ட கிரேன் மூலம் தூக்கி, ரெயில் பாதையில் தண்டவாளத்தை அடுத்துள்ள பகுதிகளில் நிறுவும் பணிகள் மற்றும் அந்த மின்கம்பங்கள் பதிக்கப்பட்ட இடங்களில் கம்பம் அசையாமல் பலம்பெறும் வகையில் தளம்பகுதியில் கான்கிரீட் போடும் பணிகள் ஆகியவை நடைபெற்றது.
இறுதிகட்ட பணிகள்
இதைத்தொடர்ந்து, மின்கம்பங்கள் நிறுவப்பட்ட மின்பாதைகளில், மின் கம்பிகளை இணைக்கும் இறுதிகட்ட பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கான பிரத்யேக ரெயிலில் (ஓ.எச்.இ.இன்ஸ்பெக்சன் கார்) வந்த பணியாளர்கள், ரெயில் பெட்டியின் மேல்பகுதியில் அமைக்கப்பட்ட மேடை வழியாக இந்த மின் கம்பங்களின் மின் பாதைகளில் மின் கம்பிகளை இணைக்கும் இறுதி கட்டபணிகளை நேற்றுமுன்தினம் மேற்கொண்டனர்
இந்த ரெயில்பாதை மின்மயமாக்கப்படும் பட்சத்தில் இந்த வழித்தடத்தில் கூடுதலாக ரெயில்கள் இயக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடம் உள்ளது.
Related Tags :
Next Story