தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 21 Feb 2022 11:31 PM IST (Updated: 21 Feb 2022 11:31 PM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டி

விபத்து அபாயம்
நாகர்கோவில் மாநகராட்சி 26-வது வார்டுக்கு உட்பட்ட மேல கருப்புக்கோட்டையில் இருந்து ஆசிராமம் செல்லும் சாலையில் சுடலைமாடசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலின் அருகில் உள்ள ஆலமரத்தின் விழுதுகள் மற்றும் கிளைகளுக்கு இடையே மின்கம்பிகள் உரசியபடி செல்கிறது. இதனால், மரத்தின் மூலம் மின் விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின்கம்பிகளுக்கு இடையூறான கிளைகளை வெட்டி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                                            -கரிகாலன், ஊட்டுவாழ்மடம். 
சேதமடைந்த குடிநீர் குழாய்
பூதப்பாண்டியில் வடக்கு தெருவில் ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கி உள்ளது. இந்த வங்கியின் அருகில் சாலையில் பதிக்கப்பட்டுள்ள குழாய் உடைந்து குடிநீர் வீணாக பாய்கிறது. இதனால், அந்த வழியாக செல்லும் பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே,குழாய் உடைப்பை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
                                                       -எஸ்.டி.ஈஸ்வரன், பூதப்பாண்டி. 
மின்கம்பம் மாற்றப்படுமா?
கொட்டாரத்தில் பிள்ளையார் கோவில் நடுத்தெரு உள்ளது. இந்த தெருவில் சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள ஒரு மின்கம்பத்தின் மேல்பகுதி சேதமடைந்து எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் நிலையில் காணப்படுகிறது. குழந்தைகள், பெண்கள் அதிகமாக நடமாடும் பகுதி என்பதால் அச்சத்துடனேயே பொதுமக்கள் கடந்து செல்கின்றனர். எனவே, சேதமடைந்த மின்கம்பத்தை உடனடியாக மாற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.
                                              -எம்.ஜி.சிவ கார்த்திகேயன், வடசேரி.
வீணாகும் குடிநீர்
நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட மறவன்குடியிருப்பில் இருந்து வல்லன்குமாரன்விளைக்கு சானல் கரைச்சாலை செல்கிறது. இந்த சாலையில் வண்ணான்விளைக்கு செல்லும் பிரிவுச்சாலையின் வழிகாட்டு பலகை வைக்கப்பட்டுள்ள பகுதியில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், குடிநீர் சாலையில் வீணாக பாய்வதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் குழாய் உடைப்பை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                              -வீரசூர பெருமாள், வண்ணான்விளை.


Next Story