சேலம் மாவட்டத்தில் 30 பேருக்கு கொரோனா

சேலம் மாவட்டத்தில் 30 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருந்தது.
சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 33 பேருக்கு கொரோனா பாதித்தது. நேற்று புதிதாக 30 பேருக்கு கொரோனா இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. மாநகர் பகுதியில் 15 பேர் பாதித்தனர். சங்ககிரி, மேச்சேரி, காடையாம்பட்டி, ஆத்தூர், ஏற்காடு, அயோத்தியாப்பட்டணம் ஆகிய இடங்களில் தலா ஒருவர், ஓமலூரில் 2 பேர் பாதித்தனர்.
நாமக்கல், தர்மபுரி, புதுக்கோட்டை, சென்னை, ஈரோடு ஆகிய வெளி மாவட்டங்களில் இருந்து சேலத்திற்கு வந்த 7 பேர் என மொத்தம் 30 பேருக்கு தொற்று பாதித்தது. இதுவரை ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 170 பேருக்கு கொரோனா பாதித்தது. ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 749 பேர் குணமடைந்தனர். 1,760 பேர் இறந்தனர்.
Related Tags :
Next Story