திருச்செங்கோடு நகராட்சியில் 19 வார்டுகளை கைப்பற்றி வாகை சூடியது தி.மு.க. 23-வது வார்டில் போட்டியிட்ட முன்னாள் எம்.எல்.ஏ. தோல்வி

திருச்செங்கோடு நகராட்சியில் 19 வார்டுகளை கைப்பற்றி வாகை சூடியது தி.மு.க. 23-வது வார்டில் போட்டியிட்ட முன்னாள் எம்.எல்.ஏ. தோல்வி
எலச்சிபாளையம்:
திருச்செங்கோடு நகராட்சியில் 19 வார்டுகளை வென்று தி.மு.க. வாகை சூடியது. 23-வது வார்டில் போட்டியிட்ட முன்னாள் எம்.எல்.ஏ. பொன்.சரஸ்வதி தோல்வி அடைந்தார்.
தபால் வாக்குகள்
திருச்செங்கோடு நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இந்த நகராட்சியில் பதிவான வாக்குகள் திருச்செங்கோட்டில் உள்ள விவேகானந்தா கல்லூரியில் எண்ணப்பட்டன. முதலில் காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. தொடர்து 8 மேஜைகளில் 11 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டன. இதையடுத்து ஒரு வார்டிலும் வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு திருச்செங்கோடு நகராட்சி தேர்தல் அலுவலர் கணேசன் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்களை வழங்கினார்.
வருகிற 4-ந் தேதி நடைபெறும் மறைமுக தேர்தலில் தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
ெவற்றி பெற்றவர்கள் விவரம்
வார்டு வாரியாக வெற்றி பெற்ற வேட்பாளர்கள் மற்றும் இதர அரசியல் கட்சி வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் வருமாறு:-
1-வது வார்டு தி.மு.க. வெற்றி
மாதேஸ்வரன் (தி.மு.க.)- 1239 வாக்குகள்
ரவி (அ.தி.மு.க.)- 432
2-வது வார்டு அ.தி.மு.க. வெற்றி
கார்த்திகேயன் அ.தி.மு.க.- 1247
சுரேஷ் தி.மு.க.- 1169
3-வது வார்டு தி.மு.க. வெற்றி
செல்வி ராஜவேல் தி.மு.க.- 916
சுலோச்சனா அ.தி.மு.க.- 782
4-வது வார்டு திமுக வெற்றி
ரமேஷ் தி.மு.க.- 1089
செல்வமணி செல்வமணி- 298
5-வது வார்டு தி.மு.க. வெற்றி
ராஜா தி.மு.க. 1349
லோகநாதன் அ.தி.மு.க.- 851
6-வது வார்டு சுயேச்சை வெற்றி
தாமரைச் செல்வி சுயேச்சை- 666
ரேவதி காங்கிரஸ்- 406
விசாலாட்சி அ.தி.மு.க.- 361
7-வது வார்டு தி.மு.க. வெற்றி
கலையரசி தி.மு.க.- 956
மல்லிகா அ.தி.மு.க.- 526
8-வது வார்டு பா.ஜனதா வெற்றி
தினேஷ்குமார் பா.ஜனதா- 1,144
பார்த்திபன் தி.மு.க.- 1064
கார்த்திகேயன் அ.தி.மு.க.- 422
9-வது வார்டு- சுயேச்சை வெற்றி
ரமேஷ் சுயேச்சை- 987
கவிதா தி.மு.க.- 602
கல்பனா பிரியதர்ஷினி அ.தி.மு.க.- 465
10-வது வார்டு அ.தி.மு.க. வெற்றி
ராஜவேல் அ.தி.மு.க.- 1026
சிவக்குமார் தி.மு.க.- 465
11-வது வார்டு தி.மு.க. வெற்றி
மனோன்மணி தி.மு.க.- 1006
சுதா அ.தி.மு.க- 792
12-வது வார்டு தி.மு.க. வெற்றி
கார்த்திகேயன் தி.மு.க.- 1159
வடிவேல் அ.தி.மு.க.- 903
13-வது வார்டு சுயேச்சை வெற்றி
சினேகா ஹரிஹரன் சுயேச்சை- 696
ரேவதி சங்கர் தி.மு.க.- 696
இருவரும் சமமான வாக்குகள் பெற்ற நிலையில் சினேகா ஹரிஹரன் குலுக்கல் முறையில் வெற்றி பெற்றார்.
14-வது வார்டு அ.தி.மு.க. வெற்றி
வெற்றி ராஜா அ.தி.மு.க.- 613
கணபதி தி.மு.க.- 595
15-வது வார்டு தி.மு.க. வெற்றி
நளினி தி.மு.க.- 1,661
கலைமணி அ.தி.மு.க.- 428
16-வது வார்டு அ.தி.மு.க. வெற்றி
வெற்றி மைதிலி அ.தி.மு.க. 745
ஆயிஷா பேகம் தி.மு.க.- 665
17-வது வார்டு சுயேச்சை வெற்றி
திவ்யா சுயேச்சை- 1202
நாகஜோதி அ.தி.மு.க.- 447
கண்ணாம்பாள் தி.மு.க.- 394
18-வது வார்டு தி.மு.க. வெற்றி
ரவிக்குமார் தி.மு.க.- 1172
விஜயபாரதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு- 606
தங்கவேல் அ.தி.மு.க.- 475
19-வது வார்டு தி.மு.க. வெற்றி
சம்பூர்ணம் தி.மு.க.- 848
கலைவாணி அ.தி.மு.க.- 646
20-வது வார்டு தி.மு.க. வெற்றி
சண்முகவடிவு தி.மு.க.- 800
சங்கீதா சுயேச்சை- 390
சாந்தி அ.தி.மு.க.- 295
21-வது வார்டு அ.தி.மு.க. வெற்றி
மல்லிகா அ.தி.மு.க.- 977
பாவாயி தி.மு.க.- 757
22-வது வார்டு அ.தி.மு.க. வெற்றி
அங்கமுத்து அ.தி.மு.க.- 965
தியாகராஜன் தி.மு.க.- 868
23-வது வார்டு தி.மு.க. வெற்றி
ரமேஷ் தி.மு.க.- 1,061
பொன் சரஸ்வதி (அ.தி.மு.க.)- 839
24-வது வார்டு தி.மு.க. வெற்றி
மகேஸ்வரி தி.மு.க.- 769
சுஜித்ரா அ.தி.மு.க.- 634
25-வது வார்டு தி.மு.க. வெற்றி
புவனேஸ்வரி உலகநாதன் தி.மு.க.- 950
பிரியதர்ஷினி அ.தி.மு.க.- 455
26-வது வார்டு சுயேச்சை வெற்றி
ராதா சுயேச்சை- 723
மீனா தி.மு.க.- 364
பழனியம்மாள் அ.தி.மு.க.- 227
27-வது வார்டு தி.மு.க. வெற்றி
தமிழரசன் தி.மு.க.- 1017
செல்வராஜ் அ.தி.மு.க.- 334
முருகானந்தன் சுயேச்சை- 307
28-வது வார்டு அ.தி.மு.க. வெற்றி
மாரிமுத்து அ.தி.மு.க.- 556
செல்வகுமார் காங்கிரஸ்- 445
தமிழரசி பா.ஜனதா- 259
29-வது வார்டு அ.தி.மு.க. வெற்றி
விஜயபிரியா முனியப்பன் அ.தி.மு.க.- 972
புஷ்பலதா தி.மு.க.- 916
30-வது வார்டு தி.மு.க. வெற்றி
செல்லம்மாள் தேவராசன் தி.மு.க.- 562
சரண்யா அ.தி.மு.க.- 522
31-வது வார்டு தி.மு.க. வெற்றி
முருகேசன் தி.மு.க.- 801
ரஞ்சித் குமார் அ.தி.மு.க.- 684
32-வது வார்டு தி.மு.க. வெற்றி
அசோக் குமார் தி.மு.க.- 650
பெரியண்ணன் அ.தி.மு.க.- 500
33-வது வார்டு தி.மு.க. வெற்றி
சுரேஷ் குமார் தி.மு.க.- 764
முனியப்பன் அ.தி.மு.க.- 647
திருச்செங்கோடு நகராட்சியில் தி.மு.க. 19 வார்டுகளையும், அ.தி.மு.க. 8 வார்டுகளையும், பா.ஜனதா 1 வார்டையும், சுயேச்சை 5 வார்டுகளையும் வென்றுள்ளது.
Related Tags :
Next Story