நந்தி, முதுமக்கள் தாழி நாகை அருங்காட்சியகத்தில் ஒப்படைப்பு


நந்தி, முதுமக்கள் தாழி நாகை அருங்காட்சியகத்தில் ஒப்படைப்பு
x
தினத்தந்தி 23 Feb 2022 11:14 PM IST (Updated: 23 Feb 2022 11:14 PM IST)
t-max-icont-min-icon

வேதாரண்யம் தாலுகாவில் இருந்து நந்தி, முதுமக்கள் தாழி நாகை அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

வேதாரண்யம்;
வேதாரண்யம் தாலுகாவில் இருந்து நந்தி, முதுமக்கள் தாழி நாகை அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
சிவன், நந்தி
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா செட்டிப்புலம், ஆயக்கரன்புலம், புஷ்பவனம் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு பணிகளுக்காக நிலத்தை தோண்டிய போது பூமியில் இருந்து மீட்கப்பட்ட சிவன், நந்தி, விநாயகர் சிலைகள் மற்றும் செட்டிப்புலம் பகுதியில் இருந்த எடுக்கப்பட்ட  முதுமக்கள் தாழி ஆகியவை வேதாரண்யம் தாலுகா அலுவலகத்தில் நீண்ட நாட்களாக வைக்கப்பட்டிருந்தது. 
அனுப்பி வைத்தனர்
இதுகுறித்து தகவல் அறிந்த கோட்டாட்சியர் துரைமுருகன் இந்த அரிய பொருட்களை நாகை அருங்காட்சியகத்தில் வைக்க உத்தரவிட்டார்.  இதன்பேரில் தாசில்தார் ரவிச்சந்திரன், உதவி தாசில்தார் வேதையன் மற்றும் அலுவலர்கள் முதுமக்கள் தாழி மற்றும் சிலைகளை வேனில் நாகை அருங்காட்சியகத்துக்கு வேதாரண்யம் கோட்டாட்சியர் துரைமுருகன் முன்னிலையில் அனுப்பி வைத்தனர்.

Next Story