சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு டி.ஐ.ஜி. பாராட்டு


சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு டி.ஐ.ஜி. பாராட்டு
x
தினத்தந்தி 24 Feb 2022 12:28 AM IST (Updated: 24 Feb 2022 12:28 AM IST)
t-max-icont-min-icon

சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு டி.ஐ.ஜி. பாராட்டு தெரிவித்தார்

அரியலூர்
அரியலூர் மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் சிறப்பாக செயல்பட்ட போலீசாரை திருச்சி சரக போலீஸ் டி.ஐ.ஜி. சரவணசுந்தர் நேரில் அழைத்து பாராட்டினார். அந்தவகையில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜவேல் (கயர்லாபாத்), அப்துல் ரசாக் (திருமானூர்), போலீஸ் ஏட்டுகளான செந்தில், ஆனந்த், போலீஸ்காரர் செந்தில் முருகன் ஆகியோர் பல்வேறு குற்ற வழக்குகளில் சிறப்பாக பணிபுரிந்ததற்காக போலீஸ் டி.ஐ.ஜி. சரவணசுந்தர் பாராட்டு சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி பாராட்டினார். இதேபோல, அரியலூர் மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட ரோந்து போலீசார் காந்தி, வேல்முருகன், பாலமுருகன் ஆகியோருக்கும் வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.


Next Story