8 பேர் கைது; 2 தந்தங்கள் மீட்பு

தேன்கனிக்கோட்டை அருகே 8 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 2 தந்தங்கள் மீட்கப்பட்டன. யானையை கொன்று தந்தங்களை எடுத்தனரா? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
தேன்கனிக்கோட்டை:-
தேன்கனிக்கோட்டை அருகே 8 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 2 தந்தங்கள் மீட்கப்பட்டன. யானையை கொன்று தந்தங்களை எடுத்தனரா? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
6 பேர் கைது
தேன்கனிக்கோட்டை அருகே தமிழக வனப்பகுதியில் காட்டுயானைகளை கொன்று அதன் தந்தங்களை சிலர் பெங்களுருவில் விற்பனை செய்து வருவதாக கர்நாடகா மாநிலம் தெப்பகுடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்குள்ள பொம்மசந்திரா பகுதியில் யானை தந்தங்களை விற்க முயன்ற தமிழகத்தை சேர்ந்த 5 பேர் மற்றும் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த ஒருவர் என 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், பிடிப்பட்டவர்கள் கர்நாடகா மாநிலம் அத்திப்பள்ளியை சேர்ந்த ரபீக் (வயது 35), தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே பூதுகோட்டை கிராமத்தை சேர்ந்த மணி (35), நமிலேரி கிராமத்தை சேர்ந்த ஹரிஸ் (25), குச்சிப்பாறை கிராமத்தை சேர்ந்த பெரியண்ணன் (37), தர்மபுரி மாவட்டம் நாகோஜனஅள்ளி சேர்ந்த மணிகண்டன் (33), தியாகராஜன் ஆகியோர் என்பது தெரிய வந்தது. கைதான 6 பேரிடம் இருந்தும் 2 யானை தந்தங்கள் மீட்கப்பட்டன.
யானையை கொன்றார்களா?
கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஓசூர் அருகே பெட்டமுகிலாளம் கிராமத்தை சேர்ந்த பவுன்ராஜ் (40), பசவராஜ் (45) ஆகியோர் தங்களுக்கு காட்டு யானைகளின் தந்தங்களை தந்ததாக தெரிவித்துள்ளனர். தொடர்ந்து கர்நாடகா மாநில போலீசார், பவுன்ராஜ், பசவராஜ் ஆகியோரை கைது செய்ய ஓசூர் வனக்கோட்ட பாதுகாவலர் கார்த்திகேயினி உதவியை நாடினர். பின்னர் போலீசார் பவுன்ராஜ், பசவராஜ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 8 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர்கள், காட்டு யானையை கொன்று தந்தங்கள் எடுத்தனரா? அல்லது அவர்களுக்கு யானை தந்தங்கள் எப்படி கிடைத்தன என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story