அ.தி.மு.க. சார்பில் நலத்திட்ட உதவிகள்


அ.தி.மு.க. சார்பில் நலத்திட்ட உதவிகள்
x
தினத்தந்தி 25 Feb 2022 6:27 PM IST (Updated: 25 Feb 2022 6:27 PM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க. சார்பில் நலத்திட்ட நலத்திட்ட உதவிகளை ஒன்றிய கழக செயலாளர் ரவி தலைமையில் அ.தி.முக. நிர்வாகிகள் வழங்கினர்.

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி திருத்தணி அடுத்த எஸ்.அக்ரஹாரம் கிராமத்தில், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் இ.என்.கண்டிகை ரவி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு அ.தி.மு.க.வினர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், அங்கு பயிலும் அங்கன்வாடி குழந்தைகளுக்கு சாப்பிடும் தட்டு வழங்கினார், பின்னர், அக்குழந்தைகளுடன் கேக் வெட்டியும், இனிப்புகளை வழங்கியும் ஜெயலலிதாவின் பிறந்தநாளை கொண்டாடினார்.

தொடர்ந்து மத்தூர் ஊராட்சியில் அ.தி.மு.க. சார்பில் அலங்கரிக்கப்பட்ட மேடையில் அமைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு ஒன்றிய கழக செயலாளர் ரவி தலைமையில் அ.தி.முக. நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செய்தனர். பின்னர், 100-க்கு மேற்பட்ட ஏழை, எளியோர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நிலவள வங்கி தலைவர் டி.எம்.சீனிவாசன், கவுன்சிலர்கள் வேலு, பாலாஜி, ஒன்றிய கழக பொருளாளர் தாமோதரன், முன்னாள் கவுன்சிலர் கருணாநிதி, சுரேஷ், மற்றும் ஆதித்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story