2 பேர் தற்கொலை


2 பேர் தற்கொலை
x
தினத்தந்தி 28 Feb 2022 12:48 AM IST (Updated: 28 Feb 2022 12:48 AM IST)
t-max-icont-min-icon

வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

சிவகாசி, 
சிவகாசி பள்ளபட்டி திருமேனிநகரை சேர்ந்தவர் பாலுமகேந்திரன் (வயது 36). இவர் சிவகாசியில் அட்டை பெட்டி தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வந்தார். இவருக்கு கணையத்தில் பாதிப்பு ஏற்பட்டு நோய் கொடுமையால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் வயிற்றுவலி அதிகமானதால் சம்பவத்தன்று இரவு தனி அறையில் படுக்க சென்றுள்ளார். பின்னர் காலையில் அவரை அவரது மனைவி லட்சுமி பார்த்த போது சேலையால் தூக்கில் தொங்கியபடி இருந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பாலுமகேந்திரன் இறந்தது உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து லட்சுமி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
அதேேபால அருப்புக்கோட்டைவெள்ளக்கோட்டை குழந்தைவேல்புரம் தெருவை சேர்ந்தவர் அருணாச்சலம். (55). இவருடைய மனைவி தனலட்சுமி. இந்நிலையில் அருணாச்சலத்திற்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன் ஏற்பட்ட விபத்தில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு வேலைக்கு செல்ல முடியாமல் மன வேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அருணாச்சலம்  வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் குறித்து அருணாச்சலத்தின் மனைவி தனலட்சுமி அருப்புக்கோட்டை டவுன் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Next Story