அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணிகள் தீவிரம்

மடத்துக்குளம் அருகே கண்ணாடி புத்தூரில் குடிசை மாற்று வாரியம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணி தீவிரமாக நடந்து வருகிறது. விரைவில் இந்த பணிகள் நிறைவடைந்து பயனாளிகளுக்கு வீடுகள் வழங்கப்படும்.
மடத்துக்குளம்
மடத்துக்குளம் அருகே கண்ணாடி புத்தூரில் குடிசை மாற்று வாரியம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணி தீவிரமாக நடந்து வருகிறது. விரைவில் இந்த பணிகள் நிறைவடைந்து பயனாளிகளுக்கு வீடுகள் வழங்கப்படும்.
அடுக்குமாடி குடியிருப்பு
மடத்துக்குளம் தாலுகாவுக்கு உட்பட்ட வாய்க்கால், ஆறு உள்ளிட்ட நீர் நிலைகள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களில் பலர் வீடு கட்டி வசித்து வருகின்றனர். இந்த இடங்களில் போதிய வசதியின்றி பாதுகாப்பற்ற சூழலும், சுகாதாரக் கேடான நிலையிலும் பொதுமக்கள் வசித்து வருகிறார்கள. இ்ங்கு வசிப்பவர்களுக்கு மாற்று ஏற்பாடாக குடிசை மாற்று வாரியம் வாயிலாக வீடுகள் கட்டி வழங்கப்படுகிறது.
அந்த வகையில் கணேசபுரம், மடத்துக்குளம், கழுகரை உள்ளிட்ட பல இடங்களில் இது போல் வசித்து வரும் 156 பேருக்கு கண்ணாடிபுத்தூரில் அடுக்குமாடி குடியிருப்புகள் அமைக்க மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அரசு நடவடிக்கை மேற்கொண்டது. இதற்காக இரண்டு ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு ரூ.13 கோடி நிதி ஒதுக்கீட்டில் 156 வீடு கட்டும்பணி 2019-ம் ஆண்டு தொடங்கியது.
பயனாளிகளுக்கு வழங்கப்படும்
ஒவ்வொரு வீடும் 400 சதுர அடி பரப்பில் படுக்கையறை, சமையலறை, கழிப்பிடம், அரங்கு மற்றும் வாசல் ஆகிய கட்டமைப்பு கொண்டதாக உள்ளது. பணிகள் தொடங்கப்பட்டு பல மாதங்கள் கடந்த நிலையில் தற் போது இந்த பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்து உள்ளது.
சில மாதங்களில் அனைத்து பணிகளும் நிறைவு செய்து பயனாளிகளிடம் வீடுகளை ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக குடிசை மாற்று வாரியத்தினர் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story