பிணை பத்திரத்தை மீறி வன்முறையில் ஈடுபட்டவருக்கு ஜெயில்


பிணை பத்திரத்தை மீறி வன்முறையில் ஈடுபட்டவருக்கு ஜெயில்
x
தினத்தந்தி 1 March 2022 10:29 PM IST (Updated: 1 March 2022 10:29 PM IST)
t-max-icont-min-icon

பிணை பத்திரத்தை மீறி வன்முறையில் ஈடுபட்டவருக்கு ஜெயில்

தூத்துக்குடி:
தூத்துக்குடி முனியசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் ஜான்சன். இவருடைய மகன் ஜேம்ஸ் என்ற சந்தோசம் (வயது 40). இவரை குற்ற விசாரணை நடைமுறைச் சட்டப் பிரிவு 107-ன் படி தூத்துக்குடி உட்கோட்ட நிர்வாக நடுவர் நீதிமன்றத்தில் போலீசார் நேரில் ஆஜர்படுத்தினர். அங்கு பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் 6 மாத காலத்துக்கு குற்ற செயல்களில் ஈடுபட மாட்டேன் என்று உறுதிமொழி கொடுத்து பிணை பத்திரம் எழுதி பெறப்பட்டது. இந்த பிணைப்பதிரம் பெறப்பட்டு 6 மாத காலம் முடிவதற்குள் ஜேம்ஸ் என்ற சந்தோசத்தை கொலை மிரட்டல் வழக்கில் வடபாகம் போலீசார் கைது செய்தனர். 
இதனால் வடபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரபி சுஜின் ஜோஸ், பிணைபத்திரத்தை மீறிய ஜேம்ஸ் என்ற சந்தோசம் மீது குற்ற விசாரணை நடைமுறைச் சட்டப்பிரிவு 107-ன் படி நடவடிக்கை எடுக்க தூத்துக்குடி உட்கோட்ட நிர்வாக நடுவர் மற்றும் உதவி கலெக்டர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார்.
அதன்பேரில் ஜேம்ஸ் என்ற சந்தோசம்; மீது குற்றவியல் நடைமுறைச்சட்டம் 122 (1) (பி) ன்படி 26.7.2022 வரை ஜெயிலில் அடைக்க தண்டனை வழங்கி தூத்துக்குடி உட்கோட்ட நிர்வாக நடுவர் மற்றும் சார் ஆட்சியர் நீதிமன்ற நடுவர் சிவசுப்பிரமணியன் உத்தரவிட்டார்.
ஏற்கனவே 14.2.2022 முதல் பேரூரணி சிறையில் இருந்து வரும் ஜேம்ஸ் என்ற சந்தோசம், உதவி கலெக்டர் வழங்கிய தண்டணையின்படி 26.7.2022 வரை சிறை தண்டனை அனுபவிப்பார் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர்.

Next Story