வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் பெண்ணின் வயிற்றில் 18 கிலோ கட்டியை டாக்டர்கள் அகற்றினர்

வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் பெண்ணின் வயிற்றில் 18 கிலோ கட்டியை டாக்டர்கள் அகற்றினர்.
வாணியம்பாடி
வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் பெண்ணின் வயிற்றில் 18 கிலோ கட்டியை டாக்டர்கள் அகற்றினர்.
வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு 45 வயது மதிக்கத்தக்க பெண் தீராத வயிற்று வலி மற்றும் வயிறு வீக்கத்தால் பாதிக்கப்பட்டு உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். இவரை ஸ்கேன் செய்து டாக்டர்கள் பரிசோதித்தபோது வயிற்றில் பெரி கட்டி இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர்.நதீம் அஹ்மத் அதலைமையிலான குழுவினர் அறுவை சிகிச்சை செய்து கட்டியை அகற்றினர் அந்த கட்டி 18 கிலோ எடை கொண்டதாக இருந்தது என டாக்டர்கள் தெரிவித்தனர்.
பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படாத நிலையில் வாணியம்பாடி அரசு மருத்துவமனை மருத்துவர் நதீம் அஹ்மத் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து கட்டியினை அகற்றியதையொட்டி அவரை நோயாளியின் குடும்பத்தாரும், பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் பாராட்டி வருகின்றனர்.
Related Tags :
Next Story