உடும்பு, முயல் வேட்டையாடிய 2 பேர் கைது


உடும்பு, முயல் வேட்டையாடிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 3 March 2022 1:17 AM IST (Updated: 3 March 2022 1:17 AM IST)
t-max-icont-min-icon

உடும்பு, முயல் வேட்டையாடிய 2 பேர் கைது

திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார் உத்தரவின் பேரில் திருப்பத்தூர், மானாமதுரை சமூக நல காடுகள் அதிகாரிகளுக்கு ஒன்றிணைத்து ஒரு குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினர் நேற்று நடைபெற்ற ரோந்து பணியில் திருப்பத்தூர்-கருப்பூர் அருகே உள்ள பகுதியில் பருத்தி கண்மாயில் ஆய்வு செய்தபோது அப்பகுதியை சேர்ந்த  அடைக்கப்பன் (வயது 65) என்பவர் கையில் உடும்புடன் செல்வதை பார்த்தனர். அவரிடம் விசாரித்தபோது அதை வேட்டையாடியது தெரியவந்தது. உடனடியாக அவர் கைது செய்யப்பட்டார். மேலும் இப்பகுதியில் ஆய்வு செய்தபோது கருப்பையா(65) என்பவர் முயலை வேட்டையாடியது தெரியவந்தது. அவரும் கைது செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. இக்குழுவில் வனச்சரகர் மதிவாணன் தலைமையில் வனவர்கள் திருப்பதிராஜன், சம்பத்குமர், வீரையா, அப்துல் ரஹீம், சதீஷ்குமார், பிரகாஷ், உதயகுமார், சாமிக்கண்ணு, கருணாநிதி மற்றும் காவலர்கள் இடம் பெற்றுள்ளனர்.

Next Story