லாரி அதிபரின் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை
குடியாத்தம் லாரி அதிபரின் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
குடியாத்தம்
குடியாத்தம் லாரி அதிபரின் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பல லட்சம் ரூபாய் கடன்
வேலூர் மாவட்டம், குடியாத்தம் டவுன் புதுப்பேட்டை பிள்ளையார் கோவில் தெருவில் வசிப்பவர் பிரபு, லாரி அதிபர். இவரின் மனைவி ஸ்ரீலட்சுமி (வயது 37). இவர்களுக்கு ரூபேஷ் (12), தன்ஷிகா (8) என்ற 2 பிள்ளைகள் உள்ளனர்.
கணவன், மனைவி இருவரும் தங்களுக்கு தெரிந்தவர்கள், உறவினர்கள் எனப் பலருக்கு வட்டிக்கு கடன் கொடுத்துள்ளனர். பல லட்சம் ரூபாய் வட்டிக்கு கடன் கொடுத்த நிலையில், அதற்கான வட்டியை பலர் திருப்பி தராமல் உள்ளனர்.
சிலர் வாங்கிய கடனையும் திருப்பி கொடுக்காமல் உள்ளனர். ஸ்ரீலட்சுமி பலரிடம் கொடுத்த கடனை திருப்பி கேட்டுள்ளார். பலமுறை கேட்டும் யாரும் கடனை திருப்பி தரவில்லை.
தற்கொலை
கடன் வாங்கியவர்கள் ஸ்ரீலட்சுமியை தகாத வார்த்தைகளால் பேசி உள்ளனர். இதனால் மனவேதனை அடைந்த அவர் நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதையறிந்த அங்கிருந்தவர்கள் வெளியூர் சென்றிருந்த கணவர் பிரபுவுக்கு தகவல் தெரிவித்தனர். வீட்டுக்கு விரைந்து வந்த பிரபு மனைவியின் உடலை பார்த்து கதறினார். உடனே அவர் குடியாத்தம் டவுன் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். ஸ்ரீலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கடிதத்தை கைப்பற்றி விசாரணை
ஸ்ரீலட்சுமி தூக்கில் தொங்கிய அறையில் போலீசார் சோதனை செய்தனர். அவர், தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக தெலுங்கு மொழியில் தான் கைப்பட எழுதிய 4 பக்க கடிதம் ஒன்றை வைத்திருந்தார்.
அதில், பல லட்சம் ரூபாய் கடன் பெற்றவர்களின் பெயர்களை எழுதியிருந்தார். கடனை திருப்பி கேட்டபோது, அவர்கள் பணத்தை திருப்பி தராமல் அவதூறாகப் பேசியது குறித்தும், தற்கொலைக்கு அவர்கள் தான் காரணம் என்றும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றும் குறிப்பிட்டு இருந்தார்.
கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் குடியாத்தம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story