டிராக்டர் மோதி 13 ஆடுகள் சாவு


டிராக்டர் மோதி 13 ஆடுகள் சாவு
x
தினத்தந்தி 5 March 2022 1:58 AM IST (Updated: 5 March 2022 1:58 AM IST)
t-max-icont-min-icon

ஆலங்குளம் அருகே டிராக்டர் மோதி 13 ஆடுகள் பரிதாபமாக இறந்தது.

ஆலங்குளம், 
ஆலங்குளம் அருகே உள்ள தொம்ப குளம் காந்திநகரில் செல்வம், ராஜேஸ்வரன் ஆகியோர் வசித்து வருகின்றனர். இவர்கள் சொந்தமாக 850 செம்மறி ஆடுகள் வளர்த்து வருகின்றனர். ஊர் ஊராக சென்று நிலங்களில் கிடைபோட்டு அந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் நேற்று அதிகாலை கோவில்பட்டி அருகே உள்ள திட்டங்குளத்திற்கு கிடைபோடுவதற்காக ஆடுகளை கொண்டு சென்றனர். 
அப்போது கீழாண்மறைநாடு கிராமம் அருகே வந்த டிராக்டர், ஆடுகளின் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலயே 13 ஆடுகள் இறந்தன. . 5 ஆடுகளுக்கு காயம் ஏற்பட்டது. இதுகுறித்து செல்வம் ஆலங்குளம் சப் -இன்ஸ்பெக்டர் ராமசாமியிடம் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story