கைரேகையால் ரேஷன் பொருட்கள் கிடைப்பதில் சிக்கல்


கைரேகையால் ரேஷன் பொருட்கள் கிடைப்பதில் சிக்கல்
x
தினத்தந்தி 7 March 2022 12:28 AM IST (Updated: 7 March 2022 12:28 AM IST)
t-max-icont-min-icon

கைரேகையால் ரேஷன் பொருட்கள் கிடைப்பதில் சிக்கல்

கீழக்கரை, 
கீழக்கரையில் 52 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு 9 ரேஷன் கடைகளிலும் 33 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களும் உள்ளனர். இந்தநிலையில் பல்வேறு காரணத்தால் ரேஷன் கடைகளில் கைரேகை வைத்தால் மட்டுமே பொருட்கள் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பின்படி ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. சில வீடுகளில் வயது முதிர்ந்தவர்கள் உள்ளதால் ரேஷன் பொருட்கள் வாங்குவதற்கு சிறுவர்கள் பொருட்கள் வாங்க செல்கின்றனர். அதில் 10 வயது முதல் 15 வயதிற்குட்பட்ட குழந்தைகள் ரேகைகள் விழுவதில் சிக்கல் ஏற்படுகிறது. மேலும் கீழக்கரையில் உள்ள சில ரேஷன் கடைகளில் கைரேகை வைக்கும் எந்திரம் கோளாறு காரணமாகவும் கைரேகை விழாமல் எந்திர கோளாறால் பொருட்கள் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் வீடு திரும்பும் நிலை இருந்து வருகிறது. இதனால் ஏழை, எளிய மக்கள் அவதி அடைகின்றனர். கைரேகை முறையை ரத்து செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் வட்ட வழங்கல் அதிகாரிகள் ரேஷன் கடைகளில் உள்ள கை ரேகை எந்திரத்தை சோதனையிட்டு சரி செய்யுமாறு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Next Story