தூத்துக்குடி: பர்னிச்சர் பூங்காவிற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டுகிறார்


தூத்துக்குடி: பர்னிச்சர் பூங்காவிற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டுகிறார்
x
தினத்தந்தி 7 March 2022 9:16 AM IST (Updated: 7 March 2022 9:55 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் பர்னிச்சர் பூங்காவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டுகிறார்

தூத்துக்குடி,

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று வந்தார்.

அவர் இன்று (திங்கட்கிழமை) காலை 9.30 மணிக்கு தூத்துக்குடி ஸ்பிக் நிறுவன வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 22 மெகாவாட் திறன் கொண்ட நீரில் மிதக்கும் சூரிய மின்உற்பத்தி நிலையத்தை திறந்து வைக்கிறார்.

அதன்பின்னர் தூத்துக்குடி- திருச்செந்தூர் ரோட்டில் உள்ள மாணிக்கம் மகால் திருமண மண்டபத்தில் சர்வதேச பர்னிச்சர் பூங்காவுக்கான (அறைகலன் பூங்கா) அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளது. இதில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைக்கிறார்.

தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் 1,150 ஏக்கர் பரப்பளவில் ரூ.1,000 கோடியில் அமைக்கப்பட உள்ள இந்த சர்வதேச பர்னிச்சர் பூங்கா நாட்டிலேயே முதலாவதாக அமைக்கப்படும் பூங்கா என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து மு.க.ஸ்டாலின் தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிரையண்ட் நகர், அம்பேத்கர் நகர் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்பு பணிகளை நேரில் பார்வையிடுகிறார்.

அதன்பிறகு தூத்துக்குடி மாவட்ட பயணத்தை முடித்துக்கொண்டு கன்னியாகுமரி மாவட்டத்துக்கு புறப்பட்டு செல்கிறார்.

Next Story