தூத்துக்குடியில் மேம்பாட்டு பணிகளை முதல்அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆய்வு

தூத்துக்குடியில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் நடைபெறும் மேம்பாட்டு பணிகளை முதல்-அமைச்சர் மு க ஸ்டாலின் ஆய்வு செய்தார்
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் நடைபெறும் மேம்பாட்டு பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். அப்போது சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று பொதுமக்களிடம் மனுக்களை வாங்கினார்.
ஆய்வு
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று 2-வது நாளாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவர் காலையில் ஸ்பிக் நிறுவனத்தில் மிதக்கும் சூரிய ஒளி மின்உற்பத்தி நிலையத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து அறைகலன் பூங்காவுக்கு அடிக்கல் நாட்டினார். இதனை தொடர்ந்து தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிரையண்ட்நகர் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது, சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று பொதுமக்களிடம் மனுக்களை வாங்கினார். அவருடன் பொதுமக்கள், பெண்கள் ஆர்வமுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். கட்சியினர், பத்திரிகையாளர்களிடம் வந்து நலம் விசாரித்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக கூட்டத்தில் நின்று கொண்டு இருந்த சாயர்புரத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கதறி அழுது கோரிக்கை மனு கொடுத்தார். பின்னர் முதல்-அமைச்சர் அங்கிருந்து காரில் புறப்பட்டு அம்பேத்கர் நகர் பகுதியில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்தார்.
கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சிகளில் கனிமொழி எம்.பி., சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, எம்.எல்.ஏ.க்கள் சண்முகையா (ஓட்டப்பிடாரம்), மார்க்கண்டேயன் (விளாத்திகுளம்),
தி.மு.க. மாநில இளைஞர் அணி துணை செயலாளர் எஸ்.ஜோயல், முன்னாள் எம்.பி. எஸ்.ஆர்.ஜெயதுரை, பொதுக்குழு உறுப்பினர் இந்திரகாசி, தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம், துணை அமைப்பாளர் பாலமுருகன், ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி தலைவர் சினேகவள்ளி, துணைத்தலைவர் கன்னியம்மாள், சண்முகசுந்தரம், காயல்பட்டினம் நகராட்சி தலைவர் முத்து முகம்மது ஆலிம், ஆறுமுகநேரி பேரூராட்சி தலைவர் கலாவதி, துணைத்தலைவர் கல்யாணசுந்தரம், ஆத்தூர் பேரூராட்சி தலைவர் கமால்தீன், துணைத்தலைவர் மகேசுவரி, உடன்குடி பேரூராட்சி தலைவர் ஹூமைரா ரமீஸ் பாத்திமா, துணைத்தலைவர் மால்ராஜேஷ், ஆழ்வார்திருநகரி பேரூராட்சி தலைவர் சாரதா பொன்இசக்கி, துணைத்தலைவர் சுந்தர்ராஜ், ஆழ்வார்திருநகரி நகர செயலாளர் மணிமுருகன்,
கோவில்பட்டி யூனியன் தலைவர் கஸ்தூரி சுப்புராஜ், துணைத்தலைவர் பழனிச்சாமி, கயத்தாறு மாரியப்பன், கோவில்பட்டி நகராட்சி தலைவர் கருணாநிதி, துணைத்தலைவர் ரமேஷ், ஆழ்வார்திருநகரி பஞ்சாயத்து யூனியன் தலைவர் ஜனகர், திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவஆனந்தி, துணைத்தலைவர் செங்குழி ஏ.பி.ரமேஷ், திருச்செந்தூர் நகர பொறுப்பாளர் வாள் ஆர்.சுடலை, ரமேஷ், மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தலைவர் சரவணக்குமார்,
எட்டயபுரம் நகர செயலாளர் பாரதி கணேசன், கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதகண்ணன், ஆத்தூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் முருகானந்தம், தென்திருப்பேரை பேரூராட்சி தலைவர் மணிமேகலை, துணைத்தலைவர் அமிர்தவள்ளி, முன்னாள் துணைத்தலைவர் ஆனந்த், ஏரல் பேரூராட்சி தலைவர் சர்மிளாதேவி, துணைத்தலைவர் ஜான் ரத்தினபாண்டி, தி.மு.க. ஒன்றிய பிரதிநிதி மணிவண்ணன், கயத்தாறு பேரூராட்சி தலைவர் சுப்புலட்சுமி ராஜதுரை, துணைத்தலைவர் சபுரா சலீமா, கயத்தாறு ஒன்றிய வர்த்தக அணி அமைப்பாளர் நயினார் பாண்டியன், ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story