சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது செய்யப்பட்டார்
வத்திராயிருப்பு,
வத்திராயிருப்பு அருகே சிறுமி பாலியல் தொல்லைக்கு உள்ளானார். இதுதொடர்பாக கள்ளக்காதலனுடன் அந்த சிறுமியின் தாயார் கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
பாலியல் தொல்லை
விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன்கோவில் அருகே உள்ள கூனம்பட்டியை சேர்ந்தவர் பாண்டிமுருகன் (வயது 32). இவருக்கும், வத்திராயிருப்பு பகுதியை சேர்ந்தகணவரை இழந்த 39 வயது பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.
பாண்டிமுருகன், அந்த பெண்ணின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது தனது கள்ளக்காதலியின் மகளான 17 வயது சிறுமிக்கும் அவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி இதுகுறித்து தனது தாயிடம் கூறி கதறி அழுதார்.
தாய்-கள்ளக்காதலன் கைது
ஆனால் இதனை சிறுமியின் தாய் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் பாண்டிமுருகனுக்கு ஆதரவாக பேசியுள்ளார். மேலும் இதுகுறித்து வெளியில் சொல்லக்கூடாது எனவும் எச்சரித்துள்ளார். நாளுக்கு நாள் பாண்டி முருகனின் தொல்லை அதிகரித்ததால் மனமுடைந்த சிறுமி இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு அலுவலர் ஜானகி என்பவருக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தார்.
அவர் இது தொடர்பாக வத்திராயிருப்பு போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறுமிக்கு பாலியல் ெதால்லை கொடுத்த பாண்டிமுருகன், அதற்கு உடந்தையாக இருந்த சிறுமியின் தாய் ஆகிய இருவரையும் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.
Related Tags :
Next Story