வருமான வரித்துறை விழிப்புணர்வு கருத்தரங்கு

வருமான வரித்துறை விழிப்புணர்வு கருத்தரங்கு கூட்டம் நடைபெற்றது.
காரைக்குடி
இந்திய வருமான வரித்துறை காரைக்குடி கிளை சார்பில் வருமான வரித்துறை குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மதுரை வருமான வரித்துறை உதவி ஆணையர் சதீஷ்பாபு சிறப்புரையாற்றி பேசும்போது, வருமான வரி செலுத்துபவர்களின் கணக்கு தாக்கல் செய்வதற்கு முன்பாக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாத இறுதிக்குள் முன் பணமாக குறிப்பிட்ட தொகையை செலுத்துபவர்களுக்கு வட்டியுடன் சேர்த்து கொள்ளப்படும். இதனால் வரி செலுத்துபவர்கள் அபராத தொகையை தவிர்க்க முடியும். இதில் 4 தவணைகளாகவும் செலுத்தலாம். வரியின் தொகைக்கு கூடுதலாக அட்வான்ஸ் வரி கட்டியவர்களுக்கு கணக்கு தாக்கல் முடிந்தவுடன் மீதமாக வரும் ரீபண்டு தொகைக்கு ஒரு சதவீத வட்டியுடன் சேர்த்து தரப்படும். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் தொழில் வணிக கழக தலைவர் சாமி திராவிடமணி, செயலாளர் கண்ணப்பன், மதுரை வருமான வரி அலுவலர் சூரியநாராயணன், பட்டய கணக்காளர் சங்க தலைவர் ஆடிட்டர் வெங்கடாச்சலம், வருமான வரித்துறை அதிகாரி மகேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வருமான வரி நகர ஆய்வாளர் பத்மாவதி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story