திருச்சி- திருச்செந்தூர் இடையே இன்று முதல் விரைவு பஸ் இயக்கம்


திருச்சி- திருச்செந்தூர் இடையே இன்று முதல் விரைவு பஸ் இயக்கம்
x
தினத்தந்தி 9 March 2022 1:51 AM IST (Updated: 9 March 2022 1:51 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி- திருச்செந்தூர் இடையே இன்று முதல் விரைவு பஸ் இயக்கம்

திருச்சி, மார்ச்.9-
தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துகழகம்சார்பில் பல்வேறு ஊர்களுக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் திருச்சியில் இருந்து திருச்செந்தூருக்கு இன்று (புதன்கிழமை) காலை முதல் தினசரி சேவையாக விரைவு பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ் திருச்சியில் இருந்து தினமும் காலை 9 மணி மற்றும் இரவு 9.15 மணிக்கு புறப்பட்டு திருச்செந்தூருக்கு செல்லும். இதேபோல் திருச்செந்தூரில் இருந்து இரவு 9 மணி மற்றும் மறுநாள் காலை 8.30 மணிக்கு விரைவு பஸ் புறப்பட்டு திருச்சிக்கு வந்து சேரும். இந்த பஸ் மதுரை, அருப்புக்கோட்டை, தூத்துக்குடி வழியாக இயக்கப்படுகிறது. இந்த பஸ் சேவைக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. இந்த தகவலை தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக்கழக அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story