திருமேனிநாதர் கோவிலில் பங்குனி திருவிழா


திருமேனிநாதர் கோவிலில் பங்குனி திருவிழா
x
தினத்தந்தி 10 March 2022 1:57 AM IST (Updated: 10 March 2022 1:57 AM IST)
t-max-icont-min-icon

திருச்சுழி திருமேனிநாதர் கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

காரியாபட்டி, 
திருச்சுழியில் பழமை வாய்ந்த திருமேனிநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. சுவாமி சன்னதிக்கு முன்பு உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக, யாகசாலை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. இந்த விழா 10 நாட்கள் நடைபெறுகிறது. விழாவினை முன்னிட்டு தினமும் சுவாமி மற்றும் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.  16-ந் தேதி திருக்கல்யாணமும், 17-ந் தேதி தேரோட்டமும் நடைபெற உள்ளது. ெகாடியேற்றும் விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Next Story